தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று சட்டவிரோதமாக வெளிமாநில லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை செய்த 11 பேர் மற்றும் கஞ்சா விற்பனை செய்த 5 பேர் கைது – இந்த ஆண்டு இதுவரை சட்ட விரோதமாக லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை செய்த 71 பேரும், கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 338 பேரும் கைது – மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ்.ஜெயக்குமார் அவர்கள் நடவடிக்கை.
சட்டவிரோதமாக லாட்டரி டிக்கெட்கள் மற்றும் கஞ்சா போன்ற போதை பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்கும்பொருட்டு அந்ததந்த உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில் பல்வேறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.