மதுரை : மதுரை மாவட்டம், நாகமலை புதுக்கோட்டை காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா கடத்துவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், இன்று (01.02.2023) நாகமலை புதுக்கோட்டை காவல் ஆய்வாளர் தலைமையில் காவல்துறையினர் துவரிமான் சந்திப்பு கண்மாய்கரை பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது சந்தேகப்படும் படியாக KL 02 BP 9193 (Suzuki Brezza ) என்ற எண்ணுள்ள காரில் வந்த மன்சூர் அலி , வயது (32), த/பெ.காசிம், 216 (49/424), ஜெயினி மேடு, பாலக்காடு, கேரளா மாநிலம், முத்தாலிப், வயது (28), த/பெ.நவ்சத், புனர்திவாசா காலனி, வெள்ளிமோன் மேற்கு அஞ்சல், பெரிநாடு, கொல்லம், கேரளா மாநிலம் மற்றும் நாசர், வயது (25), த/பெ.சபுதீன், தெகவெளத்தாடி, கண்டசுரா, பனையம், கொல்லம், கேரளா மாநிலம் ஆகிய மூன்று நபர்களை போலீசார் நிறுத்தி விசாரணை செய்ததில் அவர்கள் ஆந்திர மாநிலத்தில் இருந்து சுமார் 100 கிலோ கிராம் எடையுள்ள அரசால் தடைசெய்யப்பட்ட கஞ்சாவை மேற்கண்ட காரில் சட்டத்திற்கு புறம்பாக கடத்தி வந்தது தெரியவந்தது.
நாகமலை புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் மேற்படி குற்றவாளிகளை கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தும் குற்றவாளிகளிடமிருந்து சுமார் 100 கிலோ கிராம் கஞ்சா, மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மேற்படி வாகனத்தையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கில் சிறப்பாக செயல்பட்ட காவல்துறையினரை உயரதிகாரிகள் பாராட்டினார்கள். மேலும், மதுரை மாவட்டத்தில் இது போன்று சட்டவிரோதமாக கஞ்சா கடத்தலில் ஈடுபடுவோர்கள் பெரும்பாலும் ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிருந்து மொத்தமாக கொள்முதல் செய்து மதுரை மாவட்டத்தில் விற்பனை செய்வதாக தகவல் தெரியவந்ததால் தனிப்படை அமைக்கப்பட்டு தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வரப்படுகிறது. இனி வரும் காலங்களில் இது போன்று சட்டவிரோதமாக கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டும் சம்மந்தப்பட்ட நபர்களின் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் முடக்கப்படும் என மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ரா.சிவ பிரசாத், இ.கா.ப., அவர்கள் கடுமையாக எச்சரித்து உள்ளார்கள்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர்
திரு.விஜயராஜ்