பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் பணி புரியும் வெளி மாநில தொழிலாளர்களை ஒப்பந்தத்தின் பேரில் அழைத்து வந்து பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிய வைத்திருக்கும் ஒப்பந்ததாரர்களுடன் சிறப்பு கலந்தாய்வு கூட்டம் மாவட்ட காவல் அலுவலகத்தில் உள்ள கலந்தாய்வுக் கூடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ச.மணி அவர்களின் உத்தரவின் பேரில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. பாண்டியன் (பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு) அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்த கலந்தாய்வு கூட்டத்தில் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. மனோகரன் (நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு ) தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு.வெங்கடேசுவரன் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு நிறுவனத்தில் பணி புரியும் வெளிமாநில தொழிலாளர்களின் ஒப்பந்ததாரர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
என்றும் மக்கள் பாதுகாப்பிற்காக பெரம்பலூர் மாவட்ட காவல்துறை