சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், மானாமதுரை உட்கோட்டத்தில் உள்ள செங்கல் சூளைகளில் தங்கி பணிபுரிந்து வரும் வெளிமாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக (09.03.2023) இராமநாதபுரம் சரக காவல்துறை துணைத் தலைவர் Dr.M.துரை, ஐ.பி.எஸ்., மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.செல்வராஜ் அவர்கள் பணிபுரியும் இடத்திற்கே நேரில் சென்று வெளிமாநில தொழிலாளர்களை நேரில் சந்தித்து நிறைகுறைகளை கேட்டறிந்து, அவர்களிடம் பேசுகையில் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் வெளிமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக போலியான தகவல் பரவி வருகிறது, இதனால் யாரும் அச்சப்பட வேண்டாம் என எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி