திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள ரெட்டியபட்டியில் இயங்கிவரும் தொழிற்சாலையில் ஒடிசாவை சேர்ந்த 39 பேர் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் தங்களது ஊருக்கு திரும்பி செல்ல அரசிடம் விண்ணப்பம் செய்திருந்தனர். இந்நிலையில் இன்று வத்தலகுண்டு காவல்நிலைய ஆய்வாளர் திரு.பிச்சை பாண்டியன் அவர்கள் முன்னிலையில் தொழிலாளர்களுக்கு முழு ஊதியம் வாங்கி கொடுக்கப்பட்டு அரசின் முழு செலவில் பேருந்து மூலம் அவர்கள் தங்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அழகுராஜா