தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் டவுனிலுள்ள ஒரு பெட்டிக்கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஆன்லைன் கேரளா லாட்டரி சீட்டு விற்பனை நடைபெற்று வருவதாக பாபநாசம் உட்கோட்டம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்த ரகசிய தகவலின் பேரில் காவல்துறை கண்காணிப்பாளர் திருமதி. பூரணியின் தலைமையில் காவல் உதவி ஆய்வாளர் திரு ராஜேஷ் குமார் மற்றும் காவலர்கள் விஜயகுமார், பிரபாகர் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் அதிரடியாக இன்று (17-6-2023) அந்த கடைக்கு சென்று சோதனை மேற்கொண்டார்கள். இதில் அங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஆன்லைன் கேரளா லாட்டரி துண்டு சீட்டுகள் மற்றும் ரூபாய் 20000 மற்றும் இரண்டு கைப்பேசி மற்றும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் மது பாட்டில்கள் இருந்தன அவைகளை கைப்பற்றிய பாபநாசம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் திருமதி. பூரணி அவர்கள் மற்றும் போலீசார் அந்த பெட்டிக்கடையில் ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்து வந்த மட்டையான் திடலை சேர்ந்த வீரையன் என்பவரின் மகனான பாலதண்டாயுதபாணி (50) என்பவரை கைது செய்தார்கள் . அதனை தொடர்ந்து பாபநாசம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தார்கள்.
போலீஸ் நியூஸ் பிளஸ் செய்தியாளர்
குடந்தை-ப-சரவணன்