கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், மத்திகிரி காவல் நிலைய பகுதியில் கொத்தகொண்டப்பள்ளி To முனிஸ்வர் நகர் ரோட்டில் கொத்தூர் பேருந்து நிறுத்தம் அருகே போலீசார் வாகன சோதனையில், இருந்தபோது அவ்வழியாக வந்த இரண்டு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த போது தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ₹5,29,760/- ரூபாய் மதிப்பிலான குட்கா புகையிலை பொருட்கள் இருந்தது. குட்கா புகையிலை பொருட்கள் கடத்தி வந்த மூன்று நபர்களை கைது செய்து, புகையிலை பொருட்கள், வாகனம் பறிமுதல் செய்து நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிந்து குற்றவாளிகளை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.