கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் டவுன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஓசூர் அமேரியா பெட்ரோல் பங்க் அருகில் காவல்துறையினர், வாகன தணிக்கை அலுவலில் இருந்த போது பெங்களூரில் இருந்து ஓசூர் நோக்கி வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ₹1,46,850/- ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்கள்,₹2,400/-ரூபாய் மதிப்பிலான வெளிமாநில மதுபானம் இருந்தது. குட்கா பொருட்கள், மதுபானம் கடத்தி வந்த இரண்டு நபர்களை கைது செய்து குட்கா பொருட்கள், மதுபானம் மற்றும் வாகனம் பறிமுதல் செய்து நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிந்து இரண்டு நபர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.