கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஓசூர்-கிருஷ்ணகிரி NH ரோட்டில் காமன்தொட்டி மேம்பாலம் அருகே போலீசார் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தபோது.
அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட 2,12,800/- ரூபாய் மதிப்பிலான பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, புகையிலைப் பொருட்கள் கடத்திய நபரை கைது செய்த போலீசார் புகையிலை பொருட்களுடன் வாகனத்தையும் பறிமுதல் செய்து நிலையம் கொண்டு வந்து வழக்குப்பதிந்து எதிரியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.