கோவை : கோவை போத்தனூர் ஈஸ்வர் நகரில் உள்ள ஒரு மேன்சனில் சூடான் நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் தங்கி கோவையில் உள்ள பல்வேறு கல்லூரிகளில் படித்து வருகிறார்கள். ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் சனிக்கிழமை மாலை போத்தனூரில் உள்ள ஒரு மளிகை கடையில் கூட்டம் அலைமோதியது. அப்போது மேன்ஷனில் தங்கியிருந்த சூடான் நாட்டு வாலிபரும் பொருட்கள் வாங்க கூட்ட நெரிசலில் சிக்கினர். கூட்டத்தில் கோண வாய்க்கால் பாளையத்தை சேர்ந்த இஷாந்த் 19, என்ற வாலிபரும் இருந்தார். அப்போது சூடான் மாணவருடன் கிஷாந்த் மோதினார். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது. மொழி புரியவில்லை ஆனாலும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதுகுறித்து கிஷாந்த் தனது நண்பர்களுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் 11 பேர் மோட்டார் சைக்கிள் சம்பவ இடத்திற்கு வந்தனர் சூடான் வாலிபர் தங்கியிருந்த அறைக்கு சென்றனர். அங்கு மாணவர்கள் உட்பட மூன்று இருந்தன அவர்களை 12 பேர் கும்பல் அடித்து உதைத்தனர் இதுகுறித்து போலீசாரிடம் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் முரளிதரன் வழக்கு பதிவு செய்து 12 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.