கோவை: துபாய் ஆஸ்திரேலியா சிங்கப்பூர் மலேசியா போன்ற வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாக விளம்பரம் செய்தனர். இதை நம்பி இளைஞர்கள் பட்டதாரிகள் பலர் இவர்களிடம் லட்சக்கணக்கில் பணம் கொடுத்துள்ளனர். பணத்தை பெற்றுக் கொண்ட சகோதரர்கள் அவர்களுக்கு வேலை வாங்கி கொடுக்கவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் போலீஸ் நிலையங்களில் புகார் அளித்துள்ளார்.
இந்த நிலையில் கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த ஸ்ரீஜித் என்பவர் அங்குள்ள மாலா காவல்நிலையத்தில் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக தன்னிடம் ரூ 4 லட்சம் பணத்தை வாங்கிக்கொண்டு உதயசங்கரும் பிரதீப் சங்கரும் ஏமாற்றிவிட்டதாக புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் கேரள போலீசார் நேற்று கோவை வந்தனர்.
பின்னர் உதயசங்கர் பிரதீப் சங்கர் ஆகிய இருவரையும் கைது செய்து கேரளாவுக்கு கூட்டிசெனறனர், அவர்களிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் புகார் அளிக்கலாம். என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.இவர்கள் இருவரும் தமிழ்நாடு கேரளா ஆகிய மாநிலங்களில் வேலை வாங்கித்தருவதாக ரூ1 கோடிக்குமேல்மோசடி செய்ததாக கூறப்படுகிறது.