பெரம்பலூர் : திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் திரு.பாலகிருஷ்ணன் இ.கா.ப. அவர்களின் உத்தரவின் பேரில் பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி நிஷா பார்த்திபன் இ.கா.ப அவர்களின் தலைமையில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மாணவ மாணவிகளுக்கு கொரோனாவுக்கு எதிரான ஊரடங்கு உத்தரவு நாட்களில் வீட்டில் இருக்கும் நேரத்தை எப்படி பயனுள்ளதாக கழிப்பது என்ற தலைப்பில் பேச்சுப்போட்டி இளையவர் மற்றும் மூத்தவர் என இரண்டு வகையாக 16.05.2020 அன்று நடத்தப்பட்டது.
இதில் இளையவர்கள் பிரிவில் 28 பேரும், மூத்தவர் பிரிவில் 12 பேரும் கலந்து கொண்டு தங்கள் திறமையை வெளிப்படுத்தினார்கள். இதில் இளையவர்கள் பிரிவில் அகஸ்தியா முதலிடமும், கல்பனா இரண்டாம் இடமும், பாலாஜி மூன்றாம் இடமும், முகுந்தன் நான்காம் இடமும் பெற்று வெற்றி பெற்றார்கள். மேலும் மூத்தவர்கள் பிரிவில் வர்ஷா முதலிடமும், துஷிகா இரண்டாம் இடமும், ஹரிஹரன் மூன்றாம் இடமும், சகானா நான்காம் இடமும் பிடித்து வெற்றி பெற்றார்கள்.
மேற்படி வெற்றிபெற்ற மாணவ மாணவிகள், போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாணவ மாணவிகள் மற்றும் போட்டியினை நடத்திய நடுவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள் தெரிவித்து பரிசுகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வழங்கினார்கள்.