கோயம்புத்தூர்: 63வது தமிழ்நாடு மாநில காவல்துறையின் மண்டலங்களுக்கு இடையிலான தடகள போட்டிகள் (12.02.2024) முதல் (16.02.2024) வரை கோயம்புத்தூரில் உள்ள நேரு விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இதில் தென்மண்டல காவல்துறை அணி சார்பாக சார்பு ஆய்வாளர்கள் முதல் இரண்டாம் நிலை காவலர்கள் வரை சுமார் 60 தடகள விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டு, அவற்றில் தடகள போட்டிகளில் 11 தங்கம், 11 வெள்ளி மற்றும் 11 வெண்கலம் என 33 பதக்கங்களும், மிதிவண்டி போட்டியில் 2 தங்க பதக்கங்களும், கோ-கோ போட்டியில் 15 வெண்கல பதக்கங்களும் என மொத்தம் 50 பதக்கங்கள் (13 தங்கம், 11 வெள்ளி மற்றும் 26 வெண்கலம்) பெற்று வெற்றி பெற்றுள்ளனர்.
மேற்கண்ட போட்டிகளில் பதக்கங்களை பெற்ற தென்மண்டல காவல்துறை அணி விளையாட்டு வீரர்கள் (19.02.2024) தென்மண்டல காவல்துறைத் தலைவர் Dr.N.கண்ணன் இ.கா.ப அவர்களை நேரில் சந்தித்து பாராட்டுக்களை பெற்ற போது, தென்மண்டல காவல்துறைத் தலைவர் அவர்கள் பயிற்சியின் முக்கியத்ததுவத்தை விளையாட்டு வீரர்களுக்கு எடுத்துரைத்து விளையாட்டு போட்டிகளில் மேலும் வெற்றி பெற வாழ்த்துக்களை வழங்கினார்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர்
திரு.விஜயராஜ்