இராமநாதபுரம் : இராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கில் (23.07.2023), தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் நடைபெறவுள்ள ஆசிய ஆடவர் சாம்பியன் டிராபி போட்டிக்கான வெற்றிக்கோப்பை வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பா.விஷ்ணு சந்திரன்,இ.ஆ.ப., அவர்கள் முன்னிலை வகித்தார். மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.ஐ.பெரியசாமி அவர்கள், மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் கதர் கிராம தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் திரு.ஆர்.எஎஸ்.ராஜகண்ணப்பார் அவர்கள் ஆகியோர் தேசிய ஆடவர் சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கான வெற்றி கோப்பையை வரவேற்று மாவட்ட அளவில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்கள். மேலும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் முயற்சியால் 16 ஆண்டுகளுக்கு பின்பு சென்னையில் ஆசிய ஆடவர் சாம்பியன்ஸ் டிராபி போட்டி நடைபெறுகிறது. இப்போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், சீனா, கொரியா, ஜப்பான், மலேசியா ஆகிய நாடுகள் பங்கு பெறுகின்றன. போட்டியில் ஆர்வமுள்ள வீரர்கள் பங்கேற்று வெற்றி பெற்று மாவட்டத்திற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை தேடித்தர வேண்டுமென செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பெ.தங்கதுரை அவர்கள், இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் அவர்கள், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு.செ.முருகேசன் அவர்கள், உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு.வி.எஸ்.நாராயண சர்மா,இ.ஆ.ப. அவர்கள், மாவட்ட விளையாட்டு அலுவலர் திரு.தினோஷ்குமார் அவர்கள், இராமநாதபுரம் நகர்மன்ற தலைவர் திரு.ஆர்.கே.கார்மேகம் அவர்கள், இராமேஸ்வரம் நகர் மன்ற தலைவர் திரு.நாசர்காள் அவர்கள், இராமநாதபுரம் நகர்மன்ற துணைத்தலைவர் திரு.ஈ.ஆர்.பிரவின் தங்கம் அவர்கள், திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் திரு.புல்லாணி அவர்கள், மாவட்ட ஹாக்கி சங்கத்தலைவர் திரு.-அரவிந்த்ராஜ் அவர்கள், மாவட்ட ஹாக்கி சங்கத் துணைத்தலைவர் திரு.சின்னதுரை அப்துல்லா அவர்கள், மாவட்ட ஹாக்கி சங்கச் செயலாளர் திரு.சேதுபதி அவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி