வேலூர் : முழு ஊரடங்கின் முதல் நாளான இன்று வேலூர் மாநகரின் முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.மாநகரம் முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள் விற்பனை செய்ய மாவட்டம் முழுவதும் 419 வாகனங்களும் வேலூர் மாநகராட்சி பகுதியில் மட்டும் 113 வாகனங்கள் மூலமாக விற்பனை செய்ய மாவட்ட நிர்வாகத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொது மக்கள் தேவையின்றி வெளியில் சுற்றுவதை கண்காணிக்க மாவட்டத்தில் 57 இடங்களில் தடுப்புகள் அமைத்து 1000-த்துக்கும் மேற்பட்ட காவல் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
முக்கிய பணிகளுக்கு செல்வோர், மருந்தகம் பிற இடங்களுக்கு செல்வோர் உரிய ஆவணங்கள் வைத்திருந்தால் மட்டுமே போலீசார் அனுமதித்து வருகின்றனர்.
ஏடிஎம் மையங்கள் ,பெட்ரோல் நிலையம் ஆகியவை வழக்கம் போல் இயங்கி வருகின்றன. மேலும் பெருமுகை, பிள்ளையார்குப்பம், மாதனூர் ,கணியம்பாடி, கீழ் வல்லம், ஆகிய மூன்று மாவட்ட எல்லைகளில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
உள்ளூர் போலீசார் ஆயுதப்படை போலீசார் உள்ளிட்ட ஆயிரம் போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.