திருவாரூர்: வலங்கைமான் காவல் சரகத்தில் மேலவிடையல் பகுதியில் போலீசார் ரோந்து செய்த போது அரசு அனுமதியின்றி நாட்டு வெடி தயாரிப்பதற்கான வெடி மருந்துகள் மற்றும் மூலப்பொருட்கள் வைத்திருந்த – 1) ராஜதுரை (28). த/பெ. ராஜப்பா, மாஞ்சேரி, மேலவிடையல், வலங்கைமான். 2) சூர்யா (எ) மணிகண்டன் (21). த/பெ. ரவி, மில் தெரு, மாடாகுடி. 3) சின்னகுட்டு (எ) விஷால் (18). த/பெ. ரவிச்சந்திரன், மாஞ்சேரி, மேலவிடையல், 4) ரமணா (21). த/பெ. பாலையன், பெரியார் நகர், ஆண்டாங்கோவில் ஆகியோர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வெடிபொருள் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையிலடைக்கப்பட்டனர். அரசு அனுமதியின்றி வைத்திருந்த சுமார் 75 கிலோ (மதிப்பு ரூ.18,000/-) வெடி மருந்து
மற்றும் மூலப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. நாட்டு வெடி தயார் செய்வதற்காக வெடி மருந்து மற்றும் மூலப்பொருட்களை கண்டறிந்து சட்ட நடவடிக்கை மேற்கொண்ட வலங்கைமான் காவல் ஆய்வாளர் மற்றும் காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டினார்கள். மேலும் சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. கருண் கரட், இ.கா.ப., அவர்கள் எச்சரித்துள்ளார்கள்