பெரம்பலூர்: பெரம்பலூர்மாவட்டம் அரும்பாவூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்ட வழக்குகளான
1).அரும்பாவூர் காவல் நிலைய குற்ற எண் – 304/17 U/s 9(B)(1)(b) Explosives Act,
கைப்பற்றப்பட்ட வெடிபொருள்கள் – 350 No’s நைட்ரேட் மிக்சர்.
2).அரும்பாவூர் காவல் நிலைய குற்ற எண் – 05/19 U/s 9(B)(1)(b) Explosives Act
கைப்பற்றப்பட்ட வெடிபொருள்கள் – 1) டெட்டர்னேட்டர்-95 No’s 2) ஜெல்ஸ்டிக் -95 No’s,
3)அரும்பாவூர் காவல் நிலைய குற்ற எண் – 426/21 U/s 143 ,286, 337 IPC & 3,6 of Explosives Substances Act 1908 r/w 379 IPC 21(i) MM(DR) Act r/w 304(A) IPC,
கைப்பற்றப்பட்ட வெடிபொருள்கள் –1) டெட்டர்னேட்டர் -01, 2) Rex-90, Explosive -1,
ஆகிய வழக்குகளில் அரும்பாவூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கைப்பற்றப்பட்ட வெடிபொருட்களை அழித்து செயலிழக்கம் செய்ய கனம் குற்றவியல் நீதித்துறை நடுவர் அவர்கள் மூலம் ஆணை பெற்று திருச்சி மாநகர காவல்துறை வெடிபொருள் கண்டறியும் மற்றும் செயலிழக்க பிரிவு (BDDS Team) மூலம் 25.08.2021 தேதி மாலை 04.00 முதல் 06.00 மணிவரை வெங்கலம் கிராம புல எண் 200/1 ல் வைத்து வெடிப்பொருட்களை வெடித்தும், அழித்தும் செயலிழக்கம் செய்யப்பட்டது.
அப்போது வெடிபொருள் கண்டுபிடிப்பு மற்றும் செயலிழக்க பிரிவினர், வருவாய்துறையினர், மருத்துவ குழுவினர், தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர், 108 ஆம்புலன்ஸ் குழுவினர் மற்றும் காவல்துறை புகைப்பட நிபுணர் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
என்றும் மக்கள் பாதுகாப்பிற்காக
பெரம்பலூர் மாவட்ட காவல்துறை