திருவாரூர் : திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc, (Agri)., அவர்கள் எதிர்வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக (25.10.2024) திருவாரூர் மாவட்டம், நன்னிலம் உட்கோட்டம், வலங்கைமான் காவல் சரகத்தில் அமைக்கப்பட்டுள்ள வெடி கடைகள் விதிமுறைளுக்கு உட்பட்டு செயல்படுகிறதா என திடீர் ஆய்வு மேற்கொண்டார்கள்.
அப்போது, வெடிகடை உரிமங்களை ஆய்வு செய்தும், பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்திராத வகையில் வெடிகடைகள் அமைக்கப்பட்டிருக்கிறதா என்றும், தீயணைப்பு சாதனங்களை சோதனை செய்தும், அனைத்து வெடி கடைகளிலும் தீயணைப்பு சாதனங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்கள்.