மதுரை : மதுரை கரிமேடு புனித அந்தோனியார் ஆலய திருவிழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது விழாவின் முக்கிய நிகழ்வாக (17.06.23) சனிக்கிழமை திருப்பலி முடிந்ததும் புனித அந்தோணியார் திரு உருவம் தாங்கிய மின் அலங்கார தேர் பவனி கரிமேடு மார்க்கெட், புதுச்சிறை வீதி, மேலப் பொன்னகரம் முக்கிய வீதி, ராஜேந்திரா மெயின் ரோடு, ஆரப்பாளையம், ஞான ஒளிவுபுரம், வழியாக ஆலயம் வந்தடைந்தது. முன்னதாக ஞான ஒளிவுபுரம் புனித வளனார் ஆலய பங்குத்தந்தை ஜோசப் தலைமையில் உதவி பங்குத்தந்தை சின்னதுறை, டி.நோபி லி பள்ளி முதல்வர் அருட்தந்தை அடைக்கல ராஜா, துணை முதல்வர் அருட்தந்தை ஆனந்த், மதுரை உயர்மறை மாவட்ட பணிக்குழுக்களின் செயலர் அருட்தந்தை சந்தியாகு ஆகியோர் திருப்பலி நிறைவேற்றி திருப்பலி முடிந்ததும் புனித அந்தோணியார் உருவம் தாங்கிய மின் அலங்கார தேருக்கு ஆசி வழங்கி தேர் பவனியை துவக்கி வைத்தனர். தொடர்ந்து (18.06.23) ஞாயிறு மாலை 6.30 மணிக்கு நன்றி திருப்பலி நிறைவேற்றி கொடியிறக்கப்பட்டு திருவிழா நிறைவு பெற்றது. (19.06.23), திங்கள் சமபந்தி விருந்து நடைபெறுகிறது, மதுரை கரிமேடு அந்தோணியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு அந்தோணியார் உருவம் தாங்கிய மின் அலங்கார தேர் பவனி நடைபெற்றது.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு. ஆண்டனி வினோத்