திருவள்ளூர் : காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலுக்கு அடுத்து பிரசித்திபெற்ற ஸ்தலமாக பார்க்கப்படும் வடகாஞ்சி என அழைக்கப்படும் திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் உள்ள வரதராஜ பெருமாள் கோயிலில் கடந்த 31-ஆம் தேதி வைகாசி பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 3-ஆம் நாள் கருடோற்சவம் நடைபெற்ற நிலையில், நாள்தோறும் வரதராஜ பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பல்வேறு வாகனங்களில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த திருவிழாவில் பொன்னேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் முன்னாள் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் அதிமுக சிறுணியம் பலராமன் நாலூர் முத்துக்குமார், பட்டாபிராமன், மீஞ்சூர் மாரி, தமிழரசன், திமுக முன்னாள் தலைவர் சுப்பிரமணி ஒன்றிய குழு பெருந்தலைவர் அத்திப்பட்டு ஜி.ரவி, தி.மு.க, மீஞ்சூர் பேரூர் கழக செயலாளர் க.சு. தமிழ் உதயன், மீஞ்சூர் பேரூராட்சி தலைவர் ருக்மணி மோகன்ராஜ், மீஞ்சூர் பேரூராட்சி துணைத் தலைவர் அலெக்சாண்டர், மீஞ்சூர் பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் ஜோதிலட்சுமி மோகன், கவிதா சங்கர், தன்ராஜ் ,நக்கீரன், குமாரி புகழேந்தி, சுகன்யா வெங்கடேசன், துரைவேல் பாண்டியன், தி.மு.க நிர்வாகிகள் கோபால், ஏ.கே. சுரேஷ், ஆவின் வெங்கடேசன், முப்புராஜ் ,க.சு. தமிழ் பிரியன், விமல் ராஜ், மீஞ்சூர் கிழக்கு காங்கிரஸ் வட்டார தலைவர் அத்திப்பட்டு புருஷோத்தமன், நந்தியம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் கலாவதி, மற்றும் கோவில் அறநிலை அதிகாரி ராஜசேகரன் கோவில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு