திருநெல்வேலி : வீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்த நிகழ்வில் காவல்துறை தலைமை இயக்குனர் திரு. ஜே.கே. திரிபாதி இ.கா.ப, மதுரை தென்மண்டல காவல்துறை தலைவர் திரு. எஸ் முருகன் இ.கா.ப,, திருநெல்வேலி நகர காவல் ஆணையர் திரு. தீபக் எம் தமோர் இ.கா.ப,, திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் திரு. பிரவீன்குமார் அபிநபு இ.கா.ப,, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் திரு சந்திப் நந்தூரி இ.ஆ.ப. மற்றும் காவல்துறை அதிகாரிகள் பலர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
காவலர் சுப்பிரமணியனின் உடலை டிஜிபி திரிபாதி, தென் மண்டல ஐஜி முருகன், டிஐஜி பிரவின் குமார் அபினவ், தூத்துக்குடி எஸ்பி ஜெயக்குமார், திருநெல்வேலி எஸ்பி மணிவண்ணன் ஆகியோர் தோலில் சுமந்தபடி எடுத்து சென்றனர்.