திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர், நெ.49, திருவண்ணாமலை மெயின் ரோடு தெருவைச் சேர்ந்த உதயக்குமார் 37, என்பவர் தனது தாய் மற்றும் தாந்தை கடந்த 28.11.2021-ந் தேதி பெங்களூரில் உள்ள தனது அண்ணன் வீட்டிற்கு சென்றதாகவும்,
பின்பு வீட்டில் யாரும் இல்லாததால் வீட்டை பூட்டி விட்டு தானும் பாண்டிச்சேரிக்கு சென்றதாகவும், திரும்பி வந்து பார்க்கும் போது அடையாளம் தெரியாத நபர்களாரல் வீட்டின் முன்பக்கம் கேட்டு, மரகதவு பூட்டு, மற்றும் வீட்டின் உள்ளே இருந்த பிரோ ஆகியவற்றை உடைத்து, பீரோவில் இருந்த நகைகள் திருடு போனதாக கீழ்பென்னாத்தூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அ.பவன்குமார்,இ.கா.ப., அவர்களின் உத்தரவுப்படி, திருவண்ணாமலை நகர உட்கோட்டம் உதவி காவல் கண்காணிப்பாளர் செல்வி.D.V.கிரண் ஸ்ருதி அவர்களின் தலைமையில், கீழ்பென்னாத்தூர் காவல் ஆய்வாளர் திரு.சு.லட்சுமிபதி, உதவி ஆய்வாளர் திரு.ரவிச்சந்திரன், உதவி ஆய்வாளர் திரு.மணிவாணன், திருவண்ணாமலை குற்றபிரிவு நகர காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.கிருஷ்ணமூர்த்தி, HC-1120 திரு.செந்தில்நாதன், கீழ்பென்னாத்தூர் காவல் நிலைய HC-1455 திரு.குமார்,PC-584 திரு.விஜி, வேட்டவலம் காவல் நிலைய PC-1094 திரு.ரமேஷ்கண்ணா, திருவண்ணாமலை போக்குவரத்து காவல் நிலைய GrI-1811 திரு.மணிகண்டன், திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையம் PC -2331 திரு.சரவணன், திருவண்ணாமலை குற்றபிரிவு நகர காவல் நிலைய PC -2345திரு. சிராசுதின் ஆகியவர்களை தனிப்படை அமைத்து, வீட்டின் அருகில் இருந்த C.C.TV காட்சிகள் ஆராய்ந்தும், திருவண்ணாமலை மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தின் உதவியுடனும் குற்றவாளிகளை தேடிவந்த நிலையில், 04.12.2021-ந் தேதி மாலை 18.00 மணியளவில் கீழ்பென்னாத்தூர் காவல் ஆய்வாளர் திரு.R.லட்சுமிபதி அவர்களின் தலைமையில், திருவண்ணாமலை வழ திண்டிவனம் சாலை, கீழ்பென்னாத்தூர் M.G.R. நகர் சந்திப்பில் நடத்திய வாகன சோதனையில் போது.
கீழ்பென்னாத்தூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கி Honda Dio இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்து கொண்டு இருந்த இரண்டு நபர்களையும் மடக்கி விசாரணை செய்த போது அவர்கள் 1) திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர், இந்திரா நகரைச் சேர்ந்த துரை 40, திருநாவுக்கரசு 45, என்பதும் இருவரும் திருட்டு வழக்கில் தேடப்பட்டு வந்த நபர்கள் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது. மேற்படி இரண்டு நபர்களையும் கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மேலும் அவரிடமிருந்து உதயக்குமார் வீட்டில் திருடிய தங்ககைகள் கம்மல் – 16 கிராம், இலை கம்மல் – 10 கிராம், தங்க மோதிரம் 3 – 6 கிராம், கால் காசு 4 – 08 கிராம் என மொத்தம் 40 கிராம் மற்றும் திருட்டில் பயன்படுத்திய Honda Dio வாகனத்தையும் பறிமுதல் செய்யப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து நமது நிருபர்
திரு.தாமோதரன்