மயிலாடுதுறை : சீர்காழியில் வீட்டு வாசலில் கோலம்’ போட்டுக் கொண்டிருந்த பெண் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தென்பாதி திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் ஆனந்த ஜோதி. இவர் அரசு பள்ளி ஆசிரியராக உள்ளார். இவரது மனைவி சித்ரா (49). அதிகாலை எழுந்த சித்ரா வழக்கம் போல் வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர் ஒரு வர் சித்ராவை அடித்துக் கொலை செய்ததாக தெரிகிறது.
இது குறித்து தகவலறிந்த போலீஸார் சம்பவ நடந்த இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நகைக்காக கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெறுகிறது. கொலை சம்பவம் நடை பெற்ற இடத்திற்கு மயிலாடுதுறை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா நேரில் வந்து விசாரணை செய்தார்.