சிவகங்கை : சிவகங்கை திருப்புவனம் அருகே உள்ள பசியாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சுமதி (43) இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கருப்புச்சாமி குடும்பத்தினருக்கும் முன்விரோதம் உள்ளது. நேற்று காலை சுமதி வீட்டுக்குள் கருப்புச்சாமி பாட்டிலில் மண்எண்ணெயை நிரப்பி தீ வைத்து வீசியதாக கூறப்படுகிறது இதுகுறித்து அவர் திருப்புவனம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் சூப்பிரண்டு திரு.செந்தில்குமார், கூடுதல் சூப்பிரண்டு திருசுந்தரராஜ். மானாமதுரை துணை போலீஸ் சூப்பிரண்டு திரு.கண்ணன், ஆகியோரும் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி