திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அ.பவன் குமார் ரெட்டி,இ.கா.ப., அவர்களுக்கு கிடைத்த இரகசிய தகவலின் படி, வந்தவாசி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.V.விஸ்வேஸ்வரய்யா அவர்களின் தலைமையில், வந்தவாசி தெற்கு வட்ட காவல் ஆய்வாளர் திரு.R.குமார், உதவி ஆய்வாளர் திரு.S.ராஜ்ஜெயக்குமார் மற்றும்
காவலர்கள், வந்தவாசி கெஜலட்சுமி நகர், இரட்டை வாடை செட்டி தெருவில் நடத்திய சோதனையில், எதிரி ரவி வ/45 த/பெ கருணாநிதி, K.R.K. நகர், வந்தவாசி என்பவரின் வீட்டில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த ரூபாய் 1,49,248/- மதிப்புள்ள 278கிலோ 450கிராம் குட்கா பொருட்களை பறிமுதல் செய்த காவல்துறையினர், ரவியை கைது செய்து, வந்தவாசி தெற்கு காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பட்டார்.