திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன்,இ.கா.ப., அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி மாவட்ட குற்ற தடுப்பு தணிப்படையினர் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையில், கீழ்பெண்ணாத்தூர் வட்டம், ராயம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த கங்காதரன் (48), கண்ணன் என்பவர் ராயம்பேட்டை கிராமத்தில், கோவிந்தசாமி என்பவரின் வீட்டில் அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் மற்றும் குட்கா போன்ற போதை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அவரை கைது செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும் அவரிடமிருந்து 8.500-கிலோ கிராம் எடை உள்ள ஹான்ஸ் , குட்கா போன்ற போதை பொருட்கள் மற்றும் ஒரு ஆட்டோ கைப்பற்றப்பட்டது.