கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் அட்கோ காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குமுதேப்பள்ளி கிராமத்தில் அப்துல்ரசாக் என்பவர் செக்யூரிட்டி சர்வீஸ் பீல்டு ஆபீஸராக வேலை செய்து வருவதாகவும் 11.03.2024 ஆம் தேதி தனது வீட்டில் இரவில் தூங்கிக்கொண்டிருந்த போது காலை சுமார் 03.00 மணிக்கு கதவு உடைக்கும் சத்தம் கேட்டு எழுந்து வந்து பார்த்தபோது இரண்டு நபர்கள் கதவின் அருகே நின்றுகொண்டு இருந்ததை பார்த்து யார் நீங்கள் என்று கேட்டுக்கொண்டே வெளியில் சென்ற போது இருவரும் வேகமாக தப்பி ஓடி விட்டதாகவும், இருவரும் திருடும் நோக்கத்தில் வீட்டிற்கு வந்திருக்கலாம் என அப்துல்ரசாக் காவல் நிலையம் ஆஜராகி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிந்து போலீசார் விசாரணை செய்து திருட முயன்ற இரண்டு நபர்களை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.