சென்னை: காசிமேடு, பகுதியைச் சேர்ந்த தினேஷ், 30 என்பவர் கடந்த 27.7.2021 அன்று இரவு அவரது வீட்டில் வைத்திருந்த 1 ½ சவரன் எடை கொண்ட கம்மல் , 1 கிராம் தங்க டாலர் , குழந்தையின் சுமார் 20 கிராம் எடை கொண்ட கொலுசு மற்றும் 1 செல்போன் ஆகியவற்றை யாரோ திருடிச் சென்றுவிட்டதாக, N-2 காசிமேடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
உடனே, இரவு ரோந்து பணியிலிருந்த N – 2 காசிமேடு காவல் நிலைய சுற்றுக் காவல் வாகன பொறுப்பு சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. S. மோகன்ராஜ் , செக்டார் வாகன முதல்நிலைக் காவலர் P. அறிவழகன் ( மு.நி.கா .37491 ) மற்றும் காவலர் S. ராஜ்குமார் ( கா .48447 ) ஆகியோர் தேடுதலில் ஈடுபட்டு, குற்றச் சம்பவம் நடந்த 1 மணி நேரத்தில் மேற்படி திருட்டில் ஈடுபட்ட நரேஷ் , 23, காசிமேடு என்பவரை கைது செய்தனர்.
அவரிடமிருந்து 13 கிராம் எடை கொண்ட தங்க நகைகள், வெள்ளி கொலுசு மற்றும் 1 செல்போன் ஆகியவை கைப்பற்றப்பட்டது. மேற்படி எதிரி மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கைது செய்த N-2 காசிமேடு சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.மோகன்ராஜ் தலைமையிலான காவல் குழுவினரை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப. , அவர்கள் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.