கோவை: ஊரடங்கு காரணமாக மதுக் கடைகள் அடைக்கப்பட்டு உள்ளதால் இவர் ஆலாந்துறையில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தார், சாராயம் காய்ச்சுவது எப்படி என்பதை யூ _ டியூப் மூலம் பார்த்து வீட்டில் வைத்து சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வந்துள்ளார், இதுகுறித்து கோவை மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவுக்கு தகவல் வந்தது.
போலீஸ் சூப்பிரண்டு செல்வ நாகரத்தினம் உத்தரவின் பேரில் டி.எஸ்.பி சுந்தரராஜன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் பாலமுருகன், பாஸ்கரன் மற்றும் போலீசார் நேற்று மாலை அந்த இடத்தில் சோதனை நடத்தினர்,
அப்போது அந்த வீட்டின் முன்பு தகரம் வைத்து அடைக்கப்பட்டு இருந்தது. தகரத்தின் வழியே எட்டிப் பார்த்தபோது சம்பத்குமார் சாராயம் காய்ச்சி கொண்டிருப்பது தெரியவந்தது.
அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதால் நெகட்டிவ் ஆனதும் அவரை கைது செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர் அவரிடம் இருந்து 1500 லிட்டர் ஊறல் , 10 லிட்டர் சாராயம், 20 கிலோ சர்க்கரை, 1கேஸ் அடுப்பு , 2 சமையல் காஸ் சிலிண்டர், கடுக்காய் ஜாதிக்காய், ஒரு லிட்டர் காலி பாட்டில்கள் ,அரை லிட்டர் காலி பாட்டில்கள், பெரிய பேரல்கள் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்ற பட்டன. யூ _ டியூப் பார்த்து வீட்டில் வைத்து சாராயம் காய்ச்சிய சம்பவம் கோவை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. ஆலாந்துறை இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், மது விலக்கு இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் சோதனை நடத்தினர்.
வீட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சியது தெரியவந்தது. இதற்காக வைத்திருந்த, 1,200 லிட்டர் கள்ளச்சாராய ஊறல், 10 லிட்டர் கள்ளச்சாராயம், ஒரு ஸ்கார்பியோ கார், காஸ் ஸ்டவ், 2 சிலிண்டர், 210 கிலோ நாட்டு சக்கரை, ஒரு கிலோ கடுக்காய், ஒரு கிலோ ஜாதிக்காய், ஒரு கிலோ அதிமதுரம், 90 காலி வாட்டர் பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
போளுவாம்பட்டி சேர்ந்த சம்பத்குமார், 38 என்பவர், வீட்டை வாடகைக்கு எடுத்து, கள்ளச்சாராயம் காய்ச்சியது தெரியவந்தது. சம்பத் குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.