வேலூர் : வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ராஜேஷ் கண்ணன், அவர்களின் உத்தரவின் பேரில் தடை செய்யப்பட்ட கள்ளச்சாராயம் தயாரிப்பவர்கள் மற்றும் விற்பனை போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது இந்நிலையில் (10 /11 /2022)-ம் தேதி குடியாத்தம் தாலுகா காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. சிலம்பரசன், அவர்களின் தலைமையிலான காவல்துறையினர் குற்றவாளி சின்னரசு (28), குடியாத்தம் என்பவரின் வீட்டின் பின்புறம் அரசால் தடை செய்யப்பட்ட சட்டவிரோதமாக விற்பனைக்கு வைத்திருந்த சுமார் 120 லிட்டர் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டது.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
தென்னிந்திய தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்