கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் டவுன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சர்வேஸ்வரன் என்பவர் ஓசூர் தின்னூர் SV பாரடைஸ்சில் குடியிருந்து வருவதாகவும் 12.05.2024 ஆம் தேதி இரவு சுமார் 11.00 மணிக்கு வீட்டில் தூங்கி மறுநாள் 13.05.2024 ஆம் தேதி காலை சுமார் 05.00 மணிக்கு எழுந்து பார்த்தபோது வீட்டில் ஷோகேஸில் வைத்திருந்த செல்போன், பவர் பேங்க் மற்றும் Hard Disk,Pendrive, சில்வர் மோதிரம் ஆகியவற்றை வீட்டின் பின்பக்க தாழ்பாள் உடைத்து உள்ளே வந்து யாரோ திருடி சென்று விட்டதாக சர்வேஸ்வரன் காவல் நிலையம் ஆஜராகி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிந்து போலீசார் விசாரணை செய்து வீட்டில் திருடிய நபரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.