சென்னை: தண்டையார்பேட்டையைச் சேர்ந்த சரண்யா, வ/27, என்பவர் 09.6.2021 அன்று தூங்கிக் கொண்டிருந்ததாகவும், யாரோ சிலர் வீட்டிற்குள் புகுந்து வீட்டில் வைத்திருந்த 2 செல்போன்கள், 12 கிராம் தங்க கம்மல் மற்றும் பணம் ரூ.5,000 /- ஆகியவற்றை திருடிச் சென்றதாகவும், இதே வீட்டின் 2 வது தளத்தில் வசிக்கும் ஜான்சிமேரி, வ/ 34 , என்பவரது வீட்டிலும் மர்ம நபர்கள் புகுந்து 3 செல்போன்கள் , 8 கிராம் எடை கொண்ட கம்மல் , பிரேஸ்லேட் , மோதிரம் மற்றும் பணம் ரூ.7,000/- ஆகியவற்றை திருடிச் சென்றதாகவும், சரண்யா மற்றும் ஜான்சிமேரி இருவரும் H3 தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
அதன்பேரில், வழக்குப் பதிவு செய்து, H3 தண்டையார்பேட்டை குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்து, மேற்படி திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட 1.சந்தோஷ், (வ/21), பழைய வண்ணாரப்பேட்டை, 2.சிலம்பரசன், (வ/18), பழைய வண்ணாரப்பேட்டை, 3.சரத்குமார், (வ/20), புளியந்தோப்பு , சந்தோஷின் தாயார் 4. வரலட்சுமி (பெ/40), பழைய வண்ணாரப்பேட்டை, 5.தட்சிணாமூர்த்தி, (வ/49), திருவொற்றியூர், 6.கமல்ஹாசன், (வ/28), பழைய வண்ணாரப்பேட்டை ஆகிய 6 குற்றவாளிகளை கைது செய்து, அவர்களிடமிருந்து 8 ½ கிராம் தங்கம் , 2 இருசக்கர வாகனங்கள் மற்றும் பணம் ரூ.12,000 /- கைப்பற்றப்பட்டது. மேலும் அவர்கள்மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.