கொளத்தூரைச் சேர்ந்த கிருஷ்ணன், வ/54, என்பவர் 19.06.2021 அன்று இரவு அடையாளம் தெரியாத 5 நபர்கள், கேட்டை உடைத்து வீட்டிற்குள் நுழைந்து முதல் தளத்திற்கு சென்று, அங்கிருந்த கிருஷ்ணனின் இளைய மகளின் வாயை பொத்தி அவரிடம் கத்தியைக்காட்டி மிரட்டி பீரோவிலிருந்த பணம் ரூ.51,000/- எடுத்துக்கொண்டு காரில் ஏறி தப்பிச்சென்றனர்.
இது தொடர்பாக, கிருஷ்ணனின் இரண்டாவது மகள் V4 இராஜமங்கலம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேற்படி சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப அவர்கள் உத்தரவிட்டதின் பேரில் வில்லிவாக்கம் சரக உதவி ஆணையாளர் தலைமையில், 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு.
கண்காணிப்பு கேமரா பதிவுகளின் உதவியுடன் விசாரணை செய்து. முன்விரோதம் காரணமாக மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட 1.விஜயகுமார், (வ/26), அம்பத்தூர் 2.விஜய், (வ/25), பாடிக்குப்பம் 3.சுனில், (வ/19), பாடிக்குப்பம் 4.மதன், (வ/25), அம்பத்தூர் 5.கமலக்கண்ணன், (வ/23), திருவேற்காடு 6.ஷாம்பிரகாஷ், (வ/23), வில்லிவாக்கம் ஆகியோரை கைது செய்து, அவர்களிடமிருந்து 1 கார், 3 இருசக்கர வாகனங்கள், ரொக்கம் ரூ.51 ஆயிரம், 4 பட்டா கத்திகள் 1 இரும்புராடு கைப்பற்றப்பட்டு, அவர்கள் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.