தஞ்சை: தஞ்சாவூர் மாவட்டம் மாதாக்கோட்டை சாலை வங்கி ஊழியர் காலனியை சேர்ந்தவர் செந்தில் குமார் 48. இவர் வீட்டின் பின்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது வீட்டின் அறையில் உள்ள பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த துணிகள் சிதறி கிடந்தன. 19½ பவுன் நகை மற்றும் பணம் ரூ.8 ஆயிரம் இல்லாதது தெரியவந்தது. இதுகுறித்து அவர் தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் திரு.செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.