கோவை: கோவையை அடுத்த கோவில்பாளையம் பக் கம் உள்ளகுரும்பபாளையம் வையாபுரி நகரை சேர்ந்தவர் சிவக்குமார் ( வயது 49 இவர் நேற்று காலை 10 மணிக்கு அவரது மாமியாருக்கு கண்சிகிச்சைக்காக கோவையில் உள்ள மருத்துவமனைக்கு வந்து விட்டார்.
மாலையில் வீடு திரும்பிய போது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 8 பவுன் நகையை காணவில்லை. யாரோ திருடிச் சென்று விட்டனர்.
இது குறித்து சிவக்குமார் கோவில்பாளையம்காவல் நிலையத்தில்புகார் செய்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்கள்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்