மதுரை: அண்ணாநகர் சரகத்திற்க்கு உட்பட்ட அண்ணாநகர் மற்றும் கே.கே.நகர் பகுதிகளில் பூட்டியிருக்கும் வீட்டின் கதவை உடைத்து நகைகள் மற்றும் பணத்தை கொள்ளை அடிக்கும் சம்பவத்தில் ஈடுபடுபவர்கள் அதேபோல பேருந்துகளில் பயணிகள் கொண்டுவரும் கைபைகளில் உள்ள நகைகள் மற்றும் பணத்தை திருடும் குற்றங்கள் நடந்து வந்த நிலையில் அதில் ஈடுபட்ட குற்றவாளிகளை கண்டறிய மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.பிரேம் ஆனந்த் சின்ஹா IPS., அவர்களின் உத்தரவின் பேரில் காவல் துணை ஆணையர் (வடக்கு) முனைவர் திரு.T.K. இராஜசேகரன் IPS – அவர்களின் நேரடி பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு
அண்ணாநகர் சரக காவல் உதவி ஆணையர் திரு.சூரக்குமார் மற்றும் ஆய்வாளர்கள் திரு.பாண்டியன் மற்றும் திரு.பாலமுருகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடிவந்த நிலையில் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த மொய்தீன் வயது 32 மற்றும் அவனுடைய தம்பி சாதீக் பாட்சா மற்றும் மதுரை மாவட்டம் அலங்காநல்லூரை சேர்ந்த கோபிநாத் 32. ஆகியோர்களை பிடித்து விசாரனை செய்ததில்.
பூட்டியிருக்கும் வீடுகளை உடைத்தும் மற்றும் பேருந்தில் வரும் பயணிகளிடம் உள்ள கைபைகளில் உள்ள நகைகள் மற்றும் பணம் ஆகியவற்றை கொள்ளை அடித்த 7 வழக்குகளில் தொடர்புடையது தெரியவந்தது மூன்று குற்றவாளிகளிடம் இருந்தும் சுமார் ரூபாய்.18,00,000 – மதிப்புள்ள 45– சவரன் தங்கநகைகள் மற்றும் ரொக்கபணம் ரூபாய்.80,000 பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த குற்றவழக்குகளில் சிறப்பாக செயல்பட்டு நகைகள் மற்றும் பணத்தை மீட்ட காவல் உதவி ஆய்வாளர் திரு.செந்தில்குமார் மற்றும் தலைமை காவலர்கள் திரு.போஸ் திரு.வெங்கட்ராமன் மற்றும் காவலர்கள் முத்துக்குமார் மற்றும் லெட்சுமணன் ஆகியோர்களை மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி