மதுரை: மதுரை மாநகர் அண்ணாநகர் சரகத்திற்கு உட்பட்ட வண்டியூர் சதாசிவநகர் மற்றும்வளர்நகர் ஆகிய பகுதிகளில் உள்ள பூட்டியிருக்கும் வீடுகளை பகல் நேரங்களில் நோட்டமிட்டு இரவில் வீட்டை உடைத்து நகைகள் மற்றும் பணம் ஆகியவற்றை திருடிச்செல்லும் குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை பிடிக்க காவல் ஆணையர் திரு.பிரேம் ஆனந்த் சின்ஹா IPS., அவர்கள் உத்தரவின்படி காவல் துணை ஆணையர்(வடக்கு) திரு.T.K.இராஜசேகரன் அவர்களின் நேரடி மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு அண்ணாநகர் சரக காவல் உதவி ஆணையர் திரு.சூரக்குமார் மற்றும் காவல் ஆய்வாளர் திரு.பாண்டியன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு.
குற்றவாளிகளை தேடிவந்த நிலையில் மதுரை கல்மேடு பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்ற ராஜா மற்றும் அவனுக்கு உடந்தையாக இருந்த பழனிமுருகன் ஆகியோர்களிடம் விசாரணை செய்ததில்.
அவர்கள் அண்ணாநகர் மற்றும் வளர்நகர் பகுதிகளில் பூட்டியிருக்கும் வீடுகளில் பூட்டை உடைத்து வீட்டில் உள்ள நகைகள் மற்றும் பணம் ஆகியவற்றை கொள்ளை அடித்ததும் மற்றும் அவர்கள் 4 வழக்குகளில் தொடர்புடையதும் விசாரணையில் தெரியவந்தது.
எனவே அவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து சுமார் ரூபாய். 8,15,000/- மதிப்புள்ள 22 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூபாய் 5000/- ரொக்கப் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி