கோவை: சிஎம்சி காலனி பகுதியை சேர்ந்த ஈஸ்வரன் என்பவரின் மனைவி பார்வதி (47).இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டை பூட்டி விட்டு தனது மகள் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
மீண்டும் நேற்று திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் உள்ளே இருந்த பத்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள டிவி மற்றும் பித்தளை விளக்குகள் திருடு போயிருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து அவர் உக்கடம் போலீஸ் ஸ்டேஷனில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்