கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரி காவல் நிலைய பகுதியில் வித்யா என்பவர் அச்செட்டிப்பள்ளி கிராமத்தில் பிக் அவுட் பேரடைஸ்சில் குடியிருந்து கொண்டு 15.01.2025 ஆம் தேதி காலை 05.00 மணிக்கு மாமியார் வீடான பெங்களூருக்கு சென்று 16.01. 2025 ஆம் தேதி காலை 09.00 மணிக்கு வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பிரோ உடைத்து பிரோவில் இருந்த கம்மல், நெக்லஸ் மற்றும் மோதிரம் ஆகிய நான்கு பவுன் தங்க நகைகளை யாரோ திருடி சென்று விட்டதாக தெரிந்து அக்கம் பக்கம் விசாரித்து எந்த தகவலும் கிடைக்காததால் 09.02.2025 ஆம் தேதி வித்யா மத்திகிரி காவல் நிலையம் ஆஜராகி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிந்து போலீசார் விசாரணை செய்து வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை திருடிய இரண்டு நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 1/2 பவுன் தங்க நகை பறிமுதல் செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.