கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் *நந்தகுமார் 37. என்பவர் ஸ்வீட் மாஸ்டராக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 13.01.2022 -ம் தேதி வீட்டை பூட்டி விட்டு தனது சொந்த ஊரான கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூருக்கு குடும்பத்துடன் சென்றுயுள்ளார். நேற்று 10.02.2022 மாலை வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 1 1/2 பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இது சம்மந்தமாக நந்தகுமார் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இப்புகாரின் அடிப்படையில் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. திருமலைச்சாமி அவர்கள் வழக்குப்பதிவு செய்து புலன் விசாரணை மேற்கொண்டு, பொள்ளாச்சியை சேர்ந்த மாணிக்கம் என்பவரது மகன் மாரிமுத்து 29. என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 1 1/2 பவுன் தங்க நகைகள், வெள்ளி நகைகள் மற்றும் ரூபாய் 2,500/- ஆகியவை பறிமுதல் செய்து, மேற்படி நபரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

A. கோகுல்