கோவை: கும்பகோணத்தைச் சேர்ந்த சுந்தரவதனன் என்பவர் கடந்த 3 ஆண்டுகளாக வசித்து வருகிறார். இவர் கடந்த 13ம் தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் கும்பகோணத்திற்கு சென்றுவிட்டார்.
நேற்று அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது இதுகுறித்து சுந்தர் வதனத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர் வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த 12 பவுன் தங்க நகைகள், மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தன.
இதுகுறித்து அந்த வீட்டின் உரிமையாளர் ஸ்ரீ ராம் குமார் சூலூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்