சேலம்: சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கொத்தாம்பாடி கிராமம் பாரதியார் நகரில் குடிசை வீட்டில் வசித்து வந்தவர் காட்டுராஜா 75 இவரது மனைவி காசியம்மாள் 70 இவர்களுக்கு 1,தேசிங்குராஜா, 2, குமார், 3, மணி ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர், மூன்றாவது மகன் ரஷ்வந்தகுமாரை அடிக்கடி தாத்தா, பாட்டி இருவரும் கண்டித்து வந்துள்ளனர்,
இதனால் ஆத்திரமடைந்த ரஷ்வந்த்குமார் நேற்றிரவு 2,30 மணியளவில் தாத்தா, பாட்டி வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது வீட்டின் வெளிப்புற கதவை பூட்டி விட்டு குடிசை வீட்டிற்கு தீவைத்துள்ளார், மலமலவென எரிந்த தீயில் வயதான தம்பதி இருவரும் உடல் கருகி பலியானார்,
ஆத்தூர் ஊரக போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீயில் கருகி பலியான தம்பதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் 16 வயது சிறுவன் ரஷ்வந்த்குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,