திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், கோட்டூர் அருகே குன்னியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கமலதாசன் (58) இவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 6 பவுன் நகைகளை திருடி சென்று வீட்டனர். புகாரின் பேரில் கோட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், திருவாரூரை சேர்ந்த செந்தில்நாதன் (30) விக்னேஷ் (25) என்பதும், இவர்கள் தான் கமலதாசன் வீடுகளில் நகைகளை திருடியதும் தெரிய வந்தது. செந்தில் நாதன், விக்னேஷ் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து நகைகளை மீட்டனர்.