சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அடுத்த பள்ளத்தூர் நந்தனம் வீதியை சேர்ந்தவர் செல்வகணபதி 45. இவர் வீட்டை பூட்டி விட்டு பெங்களூரு சென்றிருந்தார். நேற்று முன்தினம் வீட்டுக்கு வந்து பார்த்த போது கதவு உடைக்கப்பட்டு கிடந்தது வீட்டின் உள்ளே பீரோவில் வைத்திருந்த ரூ.2 லட்சம் மற்றும் ஒரு தங்ககாசு ஆகியவற்றை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்த புகாரின்பேரில் பள்ளத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திரு.பாண்டி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.