மதுரை : கடந்த 27.12.2019 –ம் தேதியன்று மதுரை அப்பாதுரை நகர் முதல் தெரு, கூடல்புதுரைச் சேர்ந்த சோலை என்பவரது மகன் குணசேகரன் என்பவர் சில நபர்கள் தங்களை போலீஸ் என்று கூறி அறிமுகம் செய்து கொண்டு தனது வீட்டில் தடைசெய்யப்பட்ட பொருட்கள் இருப்பதாக கூறி வீட்டிற்குள் புகுந்து துப்பாக்கியை காட்டி மிரட்டி பீரோவில் இருந்த 170 பவுன் தங்க நகைகளையும் மற்றும் பணம் ரூ.2,80,000/- -ம் எடுத்துக்கொண்டு பொலீரோ காரில் தப்பி சென்றுவிட்டதாக D3 கூடல்புதூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரை பெற்று வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்டவர்களை விரைவில் பிடிக்க மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா.ப., அவர்கள் உத்தரவிட்டாய்கள். அவர்கள் உத்தரவுப்படி காவல் துணை ஆணையர் சட்டம் மற்றும் ஒழுங்கு திரு கார்த்திக் IPS., அவர்கள் மேற்பார்வையில் கடும் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் திரு.சீனிவாசன் தலைமையில் தனிப்படை அமைத்து எதிரிகளை தேடிவந்தனர்.
மேலும் CCTV பதிவுகளை பார்வையிட்டதில் குற்ற சம்பவத்தில் ஈடுபட்டது பழங்காநத்தம் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த புகார்தாரர் குணசேகரனின் மகனாகிய சோலைராஜா 36/20 என்பது தெரிய வந்தது. மேலும் மாடக்குளம் பெரியார் நகரைச் சேர்ந்த சோமசுந்தரம் மனைவி உமாதேவி 38/20 மற்றும் NGGO காலனி, நாகமலை புதுக்கோட்டையைச் சேர்ந்த ராஜாராம் என்பவரின் மகன் ராஜராஜன் 42/20, என்பதும் தெரியவந்தது மேலும் மேற்படி குற்றசம்பவத்தில் ஈடுபட்ட மூவரிடமும் தனித்தனியே விசாரணை செய்ததில் மூவரும் குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர்.
எனவே அவர்கள் மூவரையும் D3 கூடல்புதூர் காவல் ஆய்வாளர் திரு.கதிர்வேல் அவர்கள் கைது செய்து அவர்களிடமிருந்து 120 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்து நேற்று மூவரையும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
துரிதமாக செயல்பட்டு விரைவாக குற்றவாளிகளை கைது செய்து 120 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்த தனிப்படையினரை காவல் ஆணையர் அவர்கள் பாராட்டினார்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்
மதுரை மதுரை