தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ராஜீவ் நகரை சேர்ந்த சந்திரகுமார் மற்றும் அவரது மனைவி ஆகியோர் கடந்த 23.01.2023 அன்று இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது வீட்டில் இருந்த செல்போன் காணாமல் போயுள்ளது.
இதுகுறித்து சந்திரகுமாரின் மனைவி அளித்த புகாரின் பேரில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டதில் கோவில்பட்டி சாஸ்திரி நகரைச் சேர்ந்த முருகேசன் மகன் மகாராஜா 24. என்பவர் மேற்படி சந்திரகுமாரின் வீட்டிற்குள் புகுந்து செல்போனை திருடிச் சென்றது தெரியவந்தது.
இதனையடுத்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. அரிக்கண்ணன் வழக்குபதிவு செய்து குற்றவாளி மகாராஜாவை கைது செய்து அவரிடமிருந்த ரூபாய் 10,000/- மதிப்பிலான செல்போனையும் பறிமுதல் செய்தார்.