திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி உட்கோட்டம், வடவணக்கம்பாடி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கடம்பை கிராமம், சாம்பமூர்த்தி வ/43 த/பெ குப்பன் என்பவர், தனது வீட்டினுள் புகுந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்த, திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், இருங்கல் கிராமம், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராஜா (எ) செந்தமிழ்செல்வன் 29 மற்றும் சென்னை, தரமணி கே.பி.கே நகர,; 3-வது தெருவை சேர்ந்த மகாகணபதி 26 ஆகிய இருவரையும்
பொதுமக்கள் உதவியுடன் பிடித்து வடவணக்கம்பாடி காவல்நிலையத்தில் ஒப்படைத்ததின் பேரில், வழக்கு பதிவு செய்து, தேசூர் வட்ட காவல் ஆய்வாளர் திரு.A.பாலசுப்ரமணியன் அவர்கள் விசாரனை மேற்கொண்டதில் மேற்படி சம்பவம் உண்மையென்றும்,
மேலும் விசாரனையில் இவர்கள் இருவரும் வந்தவாசி தெற்கு,வடக்கு மற்றும் தேசூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வீடு புகுந்து கொள்ளைடித்தது தெரிய வரவே, அவர்களிடமிருந்து 21 சவரன் தங்க நகை பறிமுதல் செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்பட்டனர்.
மேற்கண்ட குற்றவாளிகள் தொடர்ந்து சட்டவிரோத செயலில் ஈடுபடுவதை தடுப்பதற்காக குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் அடைக்க, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அ.பவன் குமார் ரெட்டி,இ.கா.ப., அவர்கள் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.
மாவட்ட ஆட்சியர் திரு.பா.முருகேஷ், இ.ஆ.ப., அவர்கள், செந்தமிழ்செல்வன் மற்றும் மகாகணபதியை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்து, வேலூர் மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.