சேலம் : சேலம் ஊரக உட்கோட்டம், ஏற்காடு காவல் நிலைய எல்லைப் பகுதியில் உஸ்மான் சேட் அபூபக்கர் செட் பி. எ எஸ்டேட் மருத்துவமனை ரோடு ஏற்காடு என்ற முகவரியில் தனது குடும்பத்துடன் வசித்து வருவதாகவும் (16/3/2016), ம் தேதி அன்று இரவு உஸ்மான் சேட்டின் மனைவி நிஷா என்பவர் நாய்க்கு உணவு அளிப்பதற்காக வீட்டின் பின்புறம் உள்ள கதவை திறந்த போது அங்கு மறைந்திருந்த குற்றவாளிகள் சாலை பாறை மணி (38), சாலை பாறை ஏற்காடு ஞானசுந்தரம் (57) ஜெ.ஜெ நகர் நாகலூர் ஏற்காடு செல்வம் (41) ஏற்காடு தங்கவேல் ஏற்காடு ராமகிருஷ்ணன் (30) வி.ஆர்.ஓ செங்காடு ஏற்காடு ஆகிய குற்றவாளிகள் வீட்டிற்கு வெளியே மக்கள் நடமாட்டத்தை கண்காணித்து கொண்டிருந்தனர்.
இதில் மூன்று குற்றவாளிகள் வீட்டிற்குள் நுழைந்து கத்தி மற்றும் இரும்பு ராடை காட்டி உஸ்மான் மற்றும் அவரது மனைவியை மிரட்டி வீட்டிலிருந்து 23 சவரன் தங்க நகை மற்றும் ரூபாய் 35 ஆயிரம் ரொக்கத்தை திருடி சென்று விட்டதாக கொடுத்த புகாரின் பேரில் ஏற்காடு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து மேற்படி குற்றவாளிகளைப் பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் திருடியதாக ஒப்புக்கொண்டதன் பேரில் களவு போன பொருட்கள் குற்றவாளிகள் இடமிருந்து மீட்கப்பட்டது. இவ்வழக்கானது முதலாவது கூடுதல் சார்பு நீதிமன்றம் வாழப்பாடியில் நடைபெற்று வந்தது குற்றவாளிகள் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டு (25/4/2023)-ம் தேதி நீதிபதி திரு விவேகானந்தன் அவர்கள் குற்றவாளிகள் மணி மற்றும் ஞானசுந்தரம் ஆகிய இருவருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தும், செல்வம் தங்கவேல் இறந்துவிட்டார் மற்றும் ராமகிருஷ்ணன் (30) ஆகியோரை விடுவித்தும் தீர்ப்பு வழங்கினார் மேலும் இவ்வழக்கில் அரசு கூடுதல் வழக்கறிஞர் திரு.அசோக்குமார், அவர்கள் சிறப்பாக வாதாடி குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர உதவியாக இருந்தார். தற்போதைய விசாரணை அதிகாரியான திரு.செந்தில்ராஜ் மோகன் ஏற்பாடு காவல் நிலையம் அவர்களை சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சிவகுமார் அவர்கள் பாராட்டினார்.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஜாபர்