திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த நாலூர் ஊராட்சிக்கு உட்பட்ட கேசவபுரம் பார்வதி நகரில் மழை பெய்தால் தண்ணீர் வெளியேறுவதற்கு வாய்க்கால் இல்லாததால் வீடுகளைச் சுற்றி தண்ணீர் நிற்பதாக பொதுமக்கள் புலம்பல். சுமார் 20க்கும் மேற்பட்ட வீடுகள் இருக்கும் இந்த இடத்தில் கடத்த ஐந்து மாதங்களாக முழங்கால் அளவிற்கு தண்ணீரில் நடக்கும் நிலை உள்ளதாக இந்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் இத்தனை நாட்கள் ஊராட்சி மன்ற தலைவரின் கட்டுப்பாட்டில் இருந்த இந்த இடத்தில் இருந்த தண்ணீரை அவர்கள் வெளியேற்ற வில்லை. தற்பொழுது உள்ளாட்சி பிரதிநிதிகளில் காலம் முடித்த நிலையில் ஊராட்சியை நிர்வகிக்கும் பொறுப்பு உதவியாளர்கள் கையில் வந்த காரணத்தால் அவர்களை அழைத்து தங்களின் குறைகளை புலம்பி திருத்த பொதுமக்கள்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு