திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி உட்கோட்டம், வடுவூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இரண்டு ஓட்டு வீடுகளின் மேற்பகுதியை பிரித்து வீட்டினுள் சென்று பீரோவை உடைத்து அதிலிருந்த பணம், மோதிரம் மற்றும் கைப்பேசியை திருடிய – 1.மூவர்கோட்டை, தெற்கு தெருவை சேர்ந்த அய்யப்பன் 20, 2.ஒரத்தநாடு தாலுக்கா, கீழவண்ணிப்பட்டு, தெற்கு தெருவை சேர்ந்த மாதவன் 26. மற்றும் 3.அம்மாப்பேட்டை, அருந்துவபுரம், சமத்துவபுரம் பகுதியை சேர்ந்த நிதின் 19. ஆகிய மூவர் கைது செய்யப்பட்டர்.
மேற்படி நபர்களுக்கு வேறு ஏதேனும் திருட்டு வழக்குகளில் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து தங்க மோதிரம் மற்றும் பணம் ரூ.18,100/- பறிமுதல் செய்யப்பட்டது.
சிறப்பாக செயல்பட்டு திருட்டில் ஈடுப்பட்ட நபர்களை கைது செய்த வடுவூர் காவல் நிலைய ஆய்வாளர் செல்வி.சந்தானமேரி அவர்கள் மற்றும் அவர்களுடன் சேர்ந்து சிறப்பாக பணிபுரிந்த காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc.,(Agri)., அவர்கள் பாராட்டினார்கள்.
பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் திருட்டு, வழிப்பறி போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்பூர்வ கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc..,(Agri)., அவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.